மகளின் முதல் பார்வை. முதல் முத்தம்.. முதல் சிரிப்பு... முதல் களம்.... முதல் வெற்றி.... முதல் பதக்கம்..... முதல் முறையாக நான் அடையாத வெற்றிக்கு... நான் அடைந்தது போன்ற உணர்வு... -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்த புத்தாண்டு.. தொடக்க நொடியே மிகவும் சிறப்பாக தொடங்கியது!!! எந்த ஒரு முடிவும்... அடுத்த மிக பெரிய தொடக்கத்தின் ஆரம்பமே!!! என்ற கோட்பாட்டின் படி... நாம் இந்த முடிவிலி(infinity) வாழ்க்கையை... முன் எடுத்து செல்லுவோம்... -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என் அசு(பிராணவாயு) என் ஆதி(தொடக்கம்) என் இமை(கண்) என் ஈறிலி(கடவுள்) என் உயிர் என் ஊக்கம் என் எலுவன்(தோழன்) என் ஏற்றுவாகனன்(ஈசன்) என் ஐயா(தகப்பன்) என் ஒளி(பிரகாசம்) என் ஓசு(புகழ்) என் ஔவை (தாய்/தவபெண்) மேலே அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கும் வார்த்தைகள் அனைத்தும் நான் உன்னை மிகைப்படுத்த நான் தேடிய வார்த்தைகள் மட்டும்மே ஆனால் அது அனைத்தும் என் மடமையை வெளிபடுத்தியது ஏன்!ஏன்!! ஏன்!!! ஏன்னென்றால் மேலே அணிவகுத்து நிற்கும் அனைத்தும்... உயிர்எழுத்துக்களில்... தொடங்கும் வார்த்தைகள் மட்டும்மே!! இந்த பிரபஞ்சத்தில் உதயமாகும் அனைத்து உயிரினங்களும்... நித்தம் நித்தம் தன் மொழியில்... அந்த வார்த்தையை! எதனுடனும் ஒப்பிடமுடியாத அந்த வார்த்தையை!! தெய்வமும்!!! தெரிவையும்(25 - 30 வயது பெண்)!!! கேட்க தவம் இருக்கும்... அந்த வார்த்தையை!!! எல்லா மொழியிலும் ஒரே அர்த்தம்! ஒரே பொருள்! தரும் அந்த வார்த்தையை!!! தவிர வேறோரு வார்த்தையை!!!! எம் சித்தர்களில் முதன்மையான அகத்தியனாலும் ஏன்!! ஏன்!!! என் தமிழ் கடவுள் கந்தன்னாலும்!!!! அந்த வார்த்தையை!!! மிஞ்சிய வார்த்தை!! தர இயலாது!!! ஏன்!!! ஏன்!!!! எம் ஆதிநாதன் ஈசன்னாலும் தர இயலாது!!! ஏன்!!!! அவனை தவிர அனைத்து உயிர்ரினமும் உரிமையுடன் உரக்க உரைக்கும் அந்த வார்த்தை!!! அம்மா! அம்மா!! அம்மா!!! எந்த கைமாறு எதிர் பாராது... கருவாக இருந்த எங்களை!! தனியாலை!!!! இந்ததரணியில்!! காளையாய்(18 வயது ஆண் பிள்ளை) தளிர்த்தெல செய்ய!!!! நீ செய்த தியாகங்கள் எத்தனை எத்தனையோ!!! அறிந்தது சில... அறியாது எத்தனையோ!!!! உன் உறக்கதிலும் உன் சிந்தையில் கருவாய் இருந்த எங்களை.. கலையாமல் காக்க... நீ உடல் உருலாமல் உறங்கின... நாள்கள் எத்தனையோ!!! இந்த பிண்டத்தை(உருவற்றகரு)... உயிர்தாங்கிய உடலுடன்...இவ்வுலக்கு எங்களை நீ மறுபிறபெடுத்து பிரசவித்தாய்!!!! தாயே!!! உன் உதிரத்தை... அழுதாக்கி... எங்கள் உயிர்காத்த... நாட்கள் நன்றாகத்தான் நகர்த்திருக்ககூடும் என்று நினைக்கிறேன்... ஆனால் அச்சமயம் காலதேவன் கவர்ந்து சென்றான் உண்கணவன்... உயிரை இறைவன்னடி சேர்க்க!!! வாழ்க்கை தொடங்கவேண்டிய அந்த 23 வயதில்!!!... முடிந்தது...இருப்பினும்... உன்னுடைய அசாத்திய துணிச்சலும்... எங்களின்... எதிர்காலம் என்னும் எங்கள் வாழ்க்கைக்காக...(...என்னையும் மிறி கண் கலங்கிவிட்டது...) எங்களின் வாழ்க்கைக்காக மட்டுமே நீ வாழ துடங்கினாய்!!!... அந்த நாளில் இருந்து.... இன்று வரையிலும்... எத்தனையோ துன்பங்கள், கஷ்டங்கள், கவலைகள் இருந்தும்.... அமைதியான சமுத்திரம்போல் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு... எங்களுக்கு நீ ஆர்பரிப்பில்லா கடல் அலையாவும் தென்றல்லாகவும் திகழ்ந்தாய் இந்நாள்வரைக்கும் அப்பா என்ற உறவையும்!!! சொல்லையும்!!!குழந்தைகளால் உச்சரிக்காமல்லும் நினைக்காமல்லும் உருவாக்க முடியும் என்பதற்கு ஆகசிறந்த உதாரண நீங்கள்.... நான் எவ்வளவு முயன்றாலும் என்னால் நான் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாது.... ஏனென்றால் இந்த பிறவி மட்டும்மல்ல ஏழு பிறவி எடுத்தாலும் போதாது.... எங்களை பிரசவிப்பதற்க்காக... இந்நாளில் பிறவியெடுத்த என்தேவதை நீங்கள்... என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா... -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இவ்வுலகில் இருக்கும் அனைத்து உறவுக்கும் இடையே இடைவெளி உண்டு!!! ஒன்றை தவிர!!! ஆம் இடைவெளி உண்டு!!!எப்படி? அர்த்தநாரிக்கு அர்த்தம் அறியுங்கள்!!! ஒருவர் வாழ்க்கை இருவர் ஆனது!!! இருவர் வாழ்க்கை மூவர் ஆனது!!!! அது நம் உயிர் ஆனது!!!!! அறிந்தவையே! பரவாயில்லை!! கடவுள் தாயை தந்தான் தாய் தாரத்தை தந்தாள் தாரம் திரும்ப தாயை தந்தாள் மகளாக... சமிபத்தில்தான் சந்தித்துபோல் இருக்கிறது... ஆனால் சில வருடங்கள் கடந்துவிட்டது... ஆலயம் சென்றால் துர்க்கை அம்மனிடம் மஹாலெக்ஷ்மி போல் பெண் வரவேண்டும் என்று வேண்டுதல் வழக்கம் உண்டு... என்ன ஆச்சரியம் மஹாலெக்ஷ்மியே வந்தது... என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் மஹா!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அன்று வியட்நாம் யுத்தத்தையும் யுத்த புகையைமும் நிறுத்திக்காட்டியது ஒரு புகைப்படம்!!! ஆனால்!!! ஏன் என் இனம் இலங்கையில் இல்லாமல் ஆக்கும் வரை... கண்மூடித்தனமாக கந்தகக்குண்டுகளை மழையாய் பொழிந்து!!!.. பூமிக்கே திகட்டும் அளவுக்கு என் தமிழினம் மண்ணுக்குள் மறைத்து மீண்டும் மலர்ந்தது பூமிக்கு உரமாக!!! இன்று சிரியாவில்!!! சிரித்தும் சிறகைவிரித்தும் சிறுவர் சிறுமியர் விளையாட வேண்டிய களம்!!! இன்று யுத்தகளம்!!! மலரா மொட்டுகளாய்!!! மண்ணுக்குள் உதிர்ந்தன... வசந்த காலத்தைக் காணாமல்!!! ஏன்ஆயிரம் ஆயிரம் புகைப்படங்கள் வெளிவந்ததும்...ஒன்றுகூட... இலங்கை யுத்தத்தையும்! இன்று சிரியா யுத்தத்தையும்!! நிறுத்த முடியவில்லை? -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என் உதிரம் உருவமாக உருவாகி நிற்கிறது! என் முன்னால்!!.. நான் உயிர் வாழ உந்து சக்தியாக!!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மயில் அழகான பறவை இனம் என்று ரசித்ததுண்டு!! என் மகளின் கரங்களில் மயிலின் ஓவியம்கூட உயிர்ப்புடன் இருப்பதாக ஒரு உணர்வு எனக்கு!!! சித்திரத்தில் தீட்டபட்ட மயிலின் சித்திரம்!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காலையில் கைக்குட்டையை தேடி காணாமல் கஷ்டப்பட்ட போதுதான் நினைவு வந்தது ஊர் சென்று திரும்பும் போது என் மடிக்கணினி பையில் நீ வைத்து அனுப்பியது!!! காதலின் அருமை பிரிவில்.... மனைவியின் அருமை மகளின் பள்ளி விடுமுறையில்... கதவு முதல் கடவுள் அறை அத்தனை இடமும் தூசி துகள்கள்... கந்தையானாலும் கசக்கிக்கட்டு என்ற முதுமொழி நினைவு வருகிறது ஆனால் மலையன குவித்து இருக்கும் ஆடைகளை... கசக்க பயம் எனக்கு காலையில் தேநீரும் ரொட்டியும் தவறாமல் தருவாய்... ஆனால் இன்று தண்ணீரும் ரொட்டியும்... அழகாய் இருக்கும் நம் சமையல் அறை அழக்கோலமாய்...என்னம் தொன்றுகிறது!! நீ இன்றி என்னால் வாழ இயலாது என்று!... -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வாசம் இல்லா மலரை போல் விக்ரகம் இல்லா ஆலையம் போல் நிலவு இல்லா வானம் போல் சீவன் இல்லா சித்திரம் போல் நீர் இல்லா ஓடை போல் விடுமுறை நாட்களில் நான் நீ இல்லாமல்!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற முதுமொழி... எப்படி உண்மையாக இருக்கும் என்பதை எனக்கு எடுத்துரைத்த எங்கள் தேவதை... தன்வந்திரிக்கா... என்ன இது இவள் பெயரே... எனக்கு ஒரு சொல் கவிதையாக இருக்கு... ஆம் வள்ளுவர் வார்த்தைகள் உன்மைதான் என் மகளின் மழலை இனிமையே... குழலினும் யாழினும்...மழலை இனிமையே... -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தமிழர்களின் முதல் சொல்லும் !!! உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களும் ஒரு சேர்ந்து ஒலிக்கும் சொல்லும்!! ஆதி சிவனுக்கு கிட்டாத ஒன்று என்று எண்ணி இருந்தேன்... மூடனாக!!! அனைத்து உயிர்களின் சீவனாய் சிவன் இருப்பதை அறியாதவனாய்!!! அப்படி பட்ட சிவனை சீவணுட்க்குள் வைக்கும் சக்தி... அம்மா!!! ஒருவரின் பசிக்கு மற்றொருவர் புசிக்க முடியுமா? ஒருவரின் தோல்வியை மற்றொருவர் தன் தோல்வியாக நினைக்க முடியுமா? ஒருவரின் வலி மற்றொருவர் வலியாக உணரமுடியுமா? ஒருவரின் வெற்றி மற்றொருவர் தன் வெற்றியாக கொண்டாடமுடியுமா? ஒருவரின் நோய்க்கு மற்றொருவர் சூரணம் புசிக்க முடியுமா? மனிதனின் உதிரத்தை மற்றொருவர் பசிக்கு புசிக்க வைக்க முடியுமா? இவை அனைத்தும் சத்தியமாக சாத்தியமே... எப்படி? இதை அனைத்து அவரவர் அன்னை அமைதியாக செய்திருப்பதை அனைவரும் உணர்து இருப்போம்!!! அன்னை என்பது சிவனுக்கே கிடைக்காத அரிய உறவு... அம்மா என்ற சொல்லுக்கு நிகரான சொல் எந்த உலகிலும் எந்த மொழியிலும் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா!!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ எம் தாய் தமிழ்நாடு ஈழமாக மாறுகிறதா? நாம் நம் மண்ணுக்கும் உரிமைக்கு போராடும் நிலையில் இருக்கிறோமா? சுவாசிக்க நல்ல காற்றுக்கு போராடிய மக்களை சுடுவதா? நமக்கு பின்னர் வரும் தலைமுறைக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்... இயற்கையின் இருக்கும் அனைத்தையும் இன்று நாம் மட்டும் இன்பமாக இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தாள் போதுமா? -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சொர்க்கம் என்று ஒன்று உண்டா என்று எனக்கு தெரியாது!!! நாம் நினைத்தால் அதை நம் கண்ணெதிரே காணமுடியும்!!! உங்கள் துணையிடம் துணிந்து தோற்று பாருங்கள்!!! துணையிடம் துன்பங்களை இது துச்சம் இதுவும் கடந்து போகும் என்று துணையாக இருந்து பாருங்கள்!!! இது எனக்கு அது உனக்கு என்று பார்க்காமல் எதுவாக இருந்தாலும் நமக்கு என்று பாருங்கள்!!! காதலிலும் காமத்திலும் கண்டிப்பு இல்லாமல் இருந்து பாருங்கள்!!! ஈருடல் ஓர் உயிர் என்று வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்!!! அணுஅணுவாய் அனைத்தையும் அனுபவித்து பாருங்கள்!!! உறவுடன் ஊடலை உணர்ந்து பாருங்கள்!!! காத்திருந்து பாருங்கள்...இதுதான் காதல் என்பது புரியும்...மேலேயுள்ள அணைத்தையும் செய்து பாருங்கள்!!! சொர்க்கம் கண்முன் இருக்கும்.... -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கல் கூட சிலையாக மாறும்! கடல்லும் கரை தாண்டும்!! மாற்றம் என்ற சொல் கூட காலத்துக்கு ஏற்றாற்போல் மாறும்!!! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!!!! அது போல் என் மஹா மனசு மாறாது!!!!! சூரியன் உதிக்கும் மறையும் என்பது தவறு கோள்கள் நகர்வு நமக்கு அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கும் துலாம் முள் போன்றவள் நடுநிலையானவள் காயப்படுத்த தெரியாதவள் -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பாரதி சொன்ன கண்ணம்மா இவள்தானோ! அழகு, அழகி,அப்சரஸ், அனைத்துக்கும் அர்த்தம் தேடி அலைந்தேன்!! அருகில் இருப்பதை அறியாதவனாய்!!! ஆம் என் மகள் எனக்கு அப்படிதான் தோன்றுகிறாள்... எனக்கு மட்டுமல்ல... இரண்டாம் தாயை ஈன்ற அனைத்து அப்பணுக்கும் அப்படித்தான்!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கல் கூட சிலையாக மாறும்! கடல்லும் கரை தாண்டும்!! மாற்றம் என்ற சொல் கூட காலத்துக்கு ஏற்றாற்போல் மாறும்!!! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!!!! அது போல் என் மஹா மனசு மாறாது!!!!! சூரியன் உதிக்கும் மறையும் என்பது தவறு கோள்கள் நகர்வு நமக்கு அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கும் துலாம் முள் போன்றவள் நடுநிலையானவள் காயப்படுத்த தெரியாதவள் -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஆண் பிள்ளை பிறக்க கடவுள் அருள் தேவை என்பார்கள்... ஆனால் கடவுளே பிள்ளையாக வரவேண்டும் என்றால் பெண் பிறக்க வேண்டும் என்பது உண்மை என்று தோன்றுகிறது... இப்படி உண்னை கிருஷ்ணனாகவும் ராதையாக காணும் போது!!! என்ன அழகு.. என் மகள் அழகை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல்... ஆம் அனைத்து அப்பனுக்கு அவனது மகள் அப்படிதான்!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கவரும் காலையா! அல்லது மயக்கும் மாலையா! அவரவர் கர்பனைக்கு என் கர்பனையில் கூட்டை விட்டுச் சென்ற குருவிகள் குடும்பத்தை நாடி வீடு திரும்பி தண் ஜோடி குருவியுடண் மனதை மயக்கும் மாலை பொழுதின் இனிமையை ரசிக்கும் காட்சி...தூரிகை தீடிய சித்திரம் ஆம் மஹாவின் மயக்கும் மாலை சித்திரம்... ️ -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இனம் புரியாத சந்தோச உணர்வு மனது காற்றில் பறந்து மீண்டும் இதயத்தை அடைந்த உணர்வு.... நீ அருகில் இருக்கும் பொழுது உன் அருமை அறியாதவனாய் இருந்துவிட்டேன்... இன்று... நீ தொலைவில் இருந்தாலும்... என்றொ எடுத்த புகைப்படங்களை பார்த்து தனக்குத்தானே புன்னகைத்து கொள்கிறேன்!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ யாருக்கு நான் நன்றி சொல்வேன்... என் தாய்க்கா உன்னை என் வாழ்க்கை யாக்கியதுக்கு!!! இல்லை உன் பெற்றோருக்கா!!! இல்லை கடவுளுக்கா!!! கருவாகி உருவாகி கன்னியாகி எனக்காக காத்திருந்த கல்லியே!!! என்னில் பாதியும் உன்னில் மீதியுமாய் நான் என் உயிரே!!! எனக்கு துணையாக வாழ்க்கை துணைக்காக புவியில் பூவாய் பிறந்த என் கண்ணம்மா!!! திருமணத்திற்கு பிறகு நான் என் பிறந்த நாளை காட்டிலும் உன் பிறந்தநாளுக்கு திட்டமிட்டதே எனக்கு மகிழ்ச்சி என்னவளே!! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நான் தந்து அவள் தாங்கியதால் தாய் தந்தை ஆனோம்!!! உன்னை கடவுளிடம் இருந்து பெற்று கொண்டதால் உனக்கு பெற்றொர் ஆனோம் இன்று!!!... இத்தரணி இருக்கும் வரை நீ தழைத்து வாழ எங்கள்!!! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லமே!!! -கோபிநாத் ரெத்தினகாளி!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வாழ்க்கை துணையின் அத்தியாவசியம் அறிந்தேன்!! திருமணமான பின்பு!!! தாய்மையின் வலியும் சுமையும் அறிந்தேன்!! என் உதிரத்தை என் பாதி சுமந்த பின்பு!!! தந்தையின் அருமை அறிந்தேன்!! நான் தந்தையாக பிறந்த பின்பு!!! பெற்றோரின் பொறுப்பு அறிந்தேன்!! பிள்ளையை பள்ளியில் சேர்ந்த பின்பு!!! என்றோ எந்த பிறவியில் நான் செய்த பலனோ!! அல்லது உங்கள் முற்பிறவி கடனோ!!! அம்மாவின் அன்பும் அரவணைப்பின் அருமையும்!! அப்பாவின் அடியும் அதட்டலின் அருமையும்!!! அறிந்தேன்!!! அண்ணையே உன்னிடம் இருந்து மட்டும்!!! வாழ்க்கை என்னும் கடலில்.. நீங்கள்! நீந்தி வந்த பாதையை!!! கனவிலும் கடக்க முடியாது எவராலும் என்னை பொருத்தமட்டில்!!! எந்த பிறவியின் கடனை அடைத்து கொண்டுயிருக்கிறதோ!! உங்கள் காலணிகள்... உங்களை சுமந்து கொண்டு!!!! நான் அறியேன்!...எப்பிறவியில் என் கடனை... அடைப்பேன் என்று!!!... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்மா!!! -கோபிநாத் ரெத்தினகாளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கடலின் அடையாளம் ஓயாத அலைகள்!!! மரங்களின் அடையாளம் இதமான தென்றல்!!! பகலின் அடையாளம் உதிக்கும் ஆதவன்!!! பௌர்ணமியின் அடையாளம் ஒளிரும் சந்திரன்!!! பூக்களின் அடையாளம் மயக்கும் வாசம்!! நம் அன்பின் அடையாளம் நம் செல்ல மகள்!!! விழாத விருட்சத்தின் அடையாளம் பூமியின் அடியில் மறைந்து இருக்கும் வேர்கள்!!! நான் இந்த வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன் என்பதன் அடையாளம் நீ! மஹா!!! இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!!!! -கோபிநாத் ரெத்தினகாளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தாயாக, தாரமாக, தங்கையாக, தன் மகளாக, தன் தோழியாக, தன் காதலியாக... இப்படி எதாவது ஒரு பெண்மையை நாம் அறிந்தும்!! அறியாமலும்!! நம்முடன் இந்த கால பயணத்தில் பெண் கவனித்தும் காத்துக் கொண்டு இருக்கிறாள்!!! பெண் பூ போன்று மென்மையாக இருப்பவள் என்றதும் நிகற் இல்லை என்றேன்!!! பெண் பூமி போன்று பொறுமையாக இருப்பவள் என்றதும் நிகற் இல்லை என்றேன்!!! பெண் நிலவு போன்று பொழிவாக இருப்பவள் என்றதும் நிகற் இல்லை என்றேன்!!! பெண் எதற்கும் நிகற் இல்லை என்றால் பெண்னை எதனுடனும் ஒப்பிடுவது? பெண்மையை எதனுடனும் ஒப்பிட இயலாது!... இதுதான் நிகற் என்றும் நிச்சயமாக செல்ல முடியாது!!! அவளுக்கு அவள்மட்டுமே நிகற்!!! மகளிர் தின வாழ்த்துகள்!!!! -கோபிநாத் ரெத்தினகாளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மஹா ஓவியம் அடடா!!.. என்ன தலைபே கவிதையாக இருக்கிறது! ம்ம்!! காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக் கலை. எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியக -கோபிநாத் ரெத்தினகாளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பெண் இது வெறும் இரண்டு எழுத்துக்கள் சொல்!!!.. அல்லது ஒரு பாலினம் அவ்வளவுதான்... பெண்ணையும் பெண்ணின் ஆற்றலையும் அறியாதவர்களுக்கு. பெண் ஒரு சொல் கவிதை! பெண் ஒரு சொல் உலகம்!! பெண் ஒரு சொல் காப்பியம்!!! பெண் ஒரு சொல் இதிகாசமாகும்!!!! பெண் ஒரு சொல் மந்திரம்!!!!! பெண் ஒரு சொல் பிரபஞ்ச சக்தி!!!!!! பெண் ஒரு சொல் உலகம்!!! *தாயை குலதெய்வம்மாக *தாரத்தை அர்த்தநாரியாக *மகளை தாயாகவும் தன் உலகமாகவும் பார்ப்பவர்களுக்கு பெண் தான் உலகம் பெண் ஒரு சொல் கவிதை!!! பெண் ஒரு சொல் காப்பியம்!!! எப்படி இல்லைஎன்றால் பெண்ணின் அணிகலன்களின் பெயரால் ஐம்பெருங் காப்பியங்களாய் *சிலப்பதிகாரம் *மணிமேகலை *குண்டலகேசி *வளையாபதி *சீவகசிந்தாமணி அறியப்பட்டியிறுக்காது!!!! பெண் ஒரு சொல் இதிகாசமாகும்!!! ஏன்... எப்படி? பெண்ணை முன்நிறுத்தி... ஒரு கதையோ அல்லது பாடலோடு எழுதிநாள்... அது நம் கற்பனைக்கு எட்டாத படைபாக உருவாகும் என்பது நிச்சயம்... ஆம்... நிச்சயமே... எப்படி நம் முன் இருக்கும் சான்றுகள் இரண்டு. அப்படி ஒரு காவியத்தை நமக்கு கொடுத்து பிரம்மிப்பூட்டும் படைப்பை!!! பெண்ணை முன் நிறுத்தி எழுதியதாள் தான்!!! கம்பனும்!!! வியாசரும்!!! காலம் பல கடந்தும் இவர்கள் இருவரின் பெயரும் நிலையான இடத்தை பிடித்ததுயிருக்கிறது!காலச்சக்கரத்திள்.... நாம் முழுமுதற் கடவுளாக வழிபடும் பிள்ளையார் பார்வதிதேவியாகிய பெண் நீராடும்போது தனது திருமேனியில் பூசியிருந்த மஞ்சனைத் திரட்டி எடுத்து உருவாக்கிய உருவத்துக்கே...இவ்வாறு என்றால்... எண்ணிப்பார்க்க... பெண்ணின் ஆற்றலை.... சூரியக் குடும்பத்திலுள்ள...அனைத்து... கோல்களும் சூரியனின் சக்தியை கொண்டு இயங்குகிறதோ... அதுபோன்று ஒரு குடும்பம் சிறப்பாக இயங்க பெண்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது. ஆண்கள் தன் மகனை தகப்பனாக பார்ப்பதை விட தன் மகளை தாயாக பார்ப்பது அதிகம்!!! இன்றைய சூழலில் பெண்கள் அனைத்து... துரைகளிளும் இருக்கிறார் கள்... ஆனால்... பெண்களால் மட்டுமே செய்யப்படும் வேலை ஒன்று உண்டு... அது என்ன? அதற்கும் பெண்கள் தான் காரணம்.. ஏனென்றால்.!!! வேட்டையாடியக இருந்த நம்மை வேளாண்மை கற்பித்தது பெண் தான். நான் அறிந்து பெண்கள் மட்டுமே! நாற்று படுவார்கள்... அதில்... ஆண்கள் இடுபட்டதாக எனக்கு தெரியவில்லை.. இவ் உலகுக்கு வந்த அனைத்து அவதாரமும் கருவலி வந்தவர்களே... நிரந்திரம்! என்று ஒன்று உண்டா உலகில்? உண்டு!! எப்படி... பிரபஞ்சத்தில்... உயிர்கள் சீவிக்கும்வரை... பெண்ணும் பெண்மையும் நிரத்திரமே!!!! என்ன விந்தை! பெண் இரண்டு எழுத்துக்கள் என்று எண்ணினேன்... பெண்ணை போற்றுவொம்! பெண்ணியம் காப்போம்!! மகளிர் தின வாழ்த்துகள்!!!! -கோபிநாத் ரெத்தினக்காளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~